எரவாஞ்சேரி ஊராட்சியில் எம்எல்ஏ 400-க்கும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட எரவாஞ்சேரி ஊராட்சியில் 400-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் நிவாரணம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அதிமுக பொறுப்பாளர் எஸ்.முருகன், உத்திரங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உதயசங்கர், கிராம நிர்வாக அலுவலர் கா.மணிகண்டன், Lin.பகவதி, குரு. கோபி கணேசன், எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரிமளா செல்வராஜ், தனசேகரன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.