Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சென்னை, கேரள பகுதியிலிருந்து வந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று-தென்காசி மாவட்டத்தில் தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…

சென்னை, கேரள பகுதியிலிருந்து வந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று-தென்காசி மாவட்டத்தில் தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…

by ஆசிரியர்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார,தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,தென்காசி மாவட்டத்தில் உள்ள பல ஊர்களை சேர்ந்த 24 பேர் சென்னை,கேரளா உள்ளிட்ட வெளி மாவட்ட,மாநில பகுதிகளில் இருந்து வந்தது கண்டறியப்பட்டு சுரண்டை தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதில் கேரளா இடுமங்காட்டில் பலசரக்கு வியாபாரம் செய்து வரும் 63 வயது முதியவர், சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சாம்பவர்வடகரையை சேர்ந்த 24 வயது வாலிபர், சென்னை தியாகராஜர்  நகர் பிரபல வணிக நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வீரசிகாமணியை சேர்ந்த 26 மற்றும் 23 வயது வாலிபர் உள்ளிட்ட மொத்தம் 4 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலர் அரசப்பன் ஆகியோர் ஆலோசனையின் படி வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், கிராம உதவியாளர் கணபதி எ கணேசன்‌ சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திர குமார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வெளி மாவட்டங்கள்,வெளி மாநில பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடையே கொரோனா குறித்து அச்சம் எழுந்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!