Home செய்திகள் ராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா: 220 மாணவியருக்கு பட்டம்..

ராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா: 220 மாணவியருக்கு பட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.  இராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடத்தது. அராபிக் துறை தலைவர் எம். ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கம் செலுத்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் எம் மீரா வரவேற்நார். முஹமது சதக் அறக்கட்டளை இயக்குநர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முஹமது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். அழகப்பா பல்கலை தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த 14 மாணவிகளுக்கு பதக்கம் உள்பட 220 மாணவிகளுக்கு முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன், காரைக்குடி அழகப்பா பல்கலை கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் இயக்குனர் முனைவர் வி. சிவக்குமார் ஆகியோர் பட்டம் வழங்கினர்.

பட்டம் பெறும்  பட்டதாரி மாணவிகள் நேர்மறை சிந்தனை, நிலையான உறுதியான தன்னம்பிக்கையுடன்்சமுதாயத்திற்கு முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என  முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன்  எடுத்துரைத்தார். முஹமது சதக் கல்வி நிறுவன முதல்வர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முஹம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் உள்தர உறுதிப்பிரிவின் (IQAC) ஒருங்கிணைப்பாளரும் கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியருமான கே. அனிதா ஒருங்கிணைத்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com