Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கல்விக் கடன் முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கல்விக் கடன் முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்புக் கல்விக் கடன் முகாம் 12-09-2023 முதல் 16-09-2023 வரை 5 நாட்கள், நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும்.

மேற்கண்ட விபரப்படி நடைபெறும் சிறப்புக் கல்விக் கடன் முகாமில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து கலை பொறியியல், மருத்துவம், செவிலியர் மற்றும் சட்டக் கல்லூரி படிப்புக்கான கல்விக் கடன் எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். ரூபாய் 4 லட்சம் முதல் 7.50 இலட்சம் வரை பிணை தேவையில்லை. ஆனால் மூன்றாம் நபர் உத்திரவாதம் வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேனேஜ்மென்ட் கோட்டா (நிர்வாக ஒதுக்கீடு)-வில் சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு கட்டாயம் சொத்து பிணையம் அவசியம். மேலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாத மாணவ, மாணவியரும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான் கார்டு நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்,10, 11, 12ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் நகல், வருமான சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை கல்லூரி சேர்க்கை கடிதம், கட்டண விபரங்களுக்கான பட்டியலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு பெற்றோருடன் கலந்து கொண்டு பயன் பெறவும். இம்முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!