மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன் குளம் ஊராட்சி உள்ளது.தனக்கன் குளம் ஊராட்சியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து வணக்கம் குளம் பகுதியில் உள்ள சந்தோஷ் நகர் நேதாஜி நகர் பொதுமக்கள் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தனக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி பாண்டி மோகனிடமும் புகார் அளித்தனர் அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்பு அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும்திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பரிந்துரை செய்தனர் இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை விடப்பட்டது கோரிக்கை விடப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.