மதுரை பைபாஸ் சாலை போடி லைன் பாலத்தின் மீது மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து காளவாசல் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த கார் மீது ஆட்டோ மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் கையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து 108 அவசர கால ஊர்தி வரவழைக்கப்பட்டு ஆட்டோ டிரைவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரில் பயணம் செய்த தம்பதியினர் காயம் இன்றி உயிர் தப்பினர் .அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் ஆட்டோ மற்றும் விபத்துக்குள்ளான காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.