Home செய்திகள்மாநில செய்திகள் சீமானுக்கு வந்த சோதனை! கரும்பு விவசாய சின்னத்தில் போட்டியிட விருப்பமா கூட்டணிக்கு வாங்க! என கூப்பிடும் கர்நாடகா கட்சி..

சீமானுக்கு வந்த சோதனை! கரும்பு விவசாய சின்னத்தில் போட்டியிட விருப்பமா கூட்டணிக்கு வாங்க! என கூப்பிடும் கர்நாடகா கட்சி..

by Askar

கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற கர்நாடக கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, ‘ தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி வைத்தால் அந்த வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம்’ என சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பு வழக்கு தொடர்ந்தது. அப்போது நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை, அவர்கள் சின்னம் கேட்டு தாமதமாக விண்ணப்பித்தனர்’ என தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

இந்த நிலையில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இதனால் சீமானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் சின்னம் அடிப்படையிலான ஓட்டுகள் சிதறிவிடுமோ என சீமான் தரப்பு அஞ்சுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பா.ம.ஐ., கட்சி முடிவு செய்தது. அதாவது சீமானுக்கு கூட்டணி அழைப்பு விடுத்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநிலத் தலைவர் யோகி ஆர்.கே.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி 13 மாநிலங்களில் செயல்படும் தேசிய கட்சி. யாருடைய தூண்டுதலின் பெயரிலும் கரும்பு விவசாயி சின்னத்தை நாங்கள் பெறவில்லை. தேர்தல் ஆணையத்தில் முறைப்படி சின்னத்தை பெற்றுள்ளோம். தொகுதிக்கு 10 பேர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளனர். 10 தொகுதிகளில் உறுதியாக நாங்கள் வெற்றி பெறுவோம்.

எங்களுடன் கூட்டணி வைத்தால் அந்த வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இதன்மூலம் பாமஐ கட்சி, நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

கட்சி சின்னம் பறிபோன டென்ஷனில் இருக்கும் சீமான், இந்த அழைப்பால் மேலும் டென்ஷன் ஆவாரா அல்லது சின்னத்தை விட்டுவிட கூடாது என கூட்டணி அமைத்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவாரா என்பது விரைவில் தெரியவரும். நாளை (மார்ச் 15) நாம் தமிழர் கட்சி சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com