அமைச்சர் மணிகண்டன் பயணத்திற்கு இடையூறு செய்த 11பேர் மீது வழக்கு பதிவு..

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரின் பயணத்திற்கு இடையூறு செய்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் 3ம் ஆண்டு நினைவு அஞ்சலி உராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூலை27ல் நடந்தது.

அங்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்த தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அன்றைய தினம் காரில் பயணம் மேற்கொண்டார். பட்டணம்காத்தான் ராம் நகர் பகுதியில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், ஆதரவாளர்களின் நான்கு 4 கார்கள் அமைச்சரின் வாகனத்தை முந்திச் சென்று பயணத்திற்கு இடையூறு செய்தனர்.

இது குறித்து அமைச்சரின் நேர்முக உதவியாளர் சண்முகபாண்டியன் போலீசில் நேற்று (01/08/2018) புகார் கொடுத்தார். இதனடிப்படையில்  இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன் உள்பட 11 பேர் மீது கேணிக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிந்துள்ளதார்.