Home செய்திகள் மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி..

மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி..

by ஆசிரியர்

மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறி இராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த லண்டன், டில்லியைச் சேர்ந்த 11 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சாத்தான்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலசங்கர். இராமநாதபுரத்தில் இவர் பல்பொருள் ஏஜென்சி நடத்துகிறார். லண்டனைச் சேர்ந்த பெர்னாண்டஸ், ஸ்டீபன் எட்மண்ட், ஜூலியானா ஆகியோர் கடந்த சில மாங்களுக்கு முன் பாலசங்கரை போனில் தொடர்பு கொண்டு மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறினர். டில்லியைச் சேர்ந்த ஜோதி அகர்வால், ரஜத் சிலாங்கி மூலம் மூலிகை எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கான பணம் முழுவதையும் செலுத்தி விட்டு பெற்றுக்கொள்ளலாம் என உறுதியளித்தனர். இதையடுத்து ஜோதி அகர்வாலிடம், பாலசங்கர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஜோதி அகர்வால் கேட்டு கொண்டதற்கிணங்க டில்லியைச் சேர்ந்த மணீஷ்குமார் சிங், சுகீந்தர் சிங், ஷாஜித்கான், ராகேஷ்குமார், டைட்டன் சக்மா, ரவீந்தர் குமார், தினேஷ்குப்தா ஆகியோர் கணக்குகளில் பாலசங்கர் ராமநாதபுரம் கனரா வங்கி மூலம் ஏப்., 5 முதல் ஏப்., 23 வரை 16 தவணைகளில் ரூ.50 லட்சம் செலுத்தினார்.

பணத்தை பெற்றுக்கொண்டு சில மாதங்களாகியும் அவர்கள் பொருட்கள் அனுப்பாமல் இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலசங்கர் போனில் தொடர்பு கொண்டபோது ஜோதி அகர்வால் மேலும் பணம் கேட்டார். பெர்னாண்டஸ் உள்பட 12 திட்டமிட்டு ரூ.50 லட்சம் ஏமாற்றியதாக போலீசில் பாலசங்கர் புகார் கொடுத்தார். இதன்படி லண்டனைச் சேர்ந்த 3 பேர், டில்லியைச் சேர்ந்த 9 பேர் மீது இராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்தார். 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!