மின்சார வாரிய ஊழியரல்லாதவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பரிதாபம்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் ஏகேஎஸ் தோப்பு முல்லை நகர் பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று (02:08/2018) மாலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின் தடை ஏற்பட்டது.

இதனை அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (மின் வாரியத்தில் தற்காலிக பணியாற்றிய விபத்தில் ஒரு கை இழந்தவர்) கைலி அணிந்து கொண்டு மின் கம்பத்தில் ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். ஆபத்து என தெரிந்தும் ஊழியரல்லாத ஒருவர் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்வது சட்டத்திற்கு விரோதமானது. மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Paid Promotion