Home செய்திகள் தூய்மை இந்தியா திட்டம் பற்றி ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

தூய்மை இந்தியா திட்டம் பற்றி ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

by ஆசிரியர்

தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொது மக்களிடம் மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு ஸ்கேட்டிங் மூலம் செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சி  விஷன் இந்தியா 2020 மற்றும் திருச்சி மாவட்ட ரோல் பால் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்வில்  திருச்சி – இராமநாதபுரம் வரை 240 கி.மீ., தூர பிரசாரத்தை ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க மாநில இணை செயலாளர் மனோகரன் தலைமையில் திருச்சியில் தொடங்கப்பட்டது.

திருச்சியில் தொடங்கிய பின்னர்  தேவகோட்டையில்  தங்கிய பின் அடுத்த நாள்  காலை மீண்டும் விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்தனர். இவர்களுக்கு தேவிபட்டினம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி நிர்வாகம் சார்பில் தாளாவர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவ லதா, முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட ரோல் பால் அசோசியேஷன் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தலைவர் ஆடிட்டர் ரமேஷ் பாபு, செயலர் செந்தில் குமார், செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், பால சரவணன் மற்றும் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்று சிறப்பித்தனர். இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கிளம்பி இராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவிடம் சென்றடைந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!