கீழக்கரையில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை முகாம்..

கீழக்கரையில் இன்று (28-01-2017) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்கு வரை 2012 ம் வருடம் 2 வது மாதத்திற்க்கு பின் பிறந்த சிறு குழந்தைகளுக்கு ஆதார் அட்டை போட்டோ எடுக்கும் முகாம் நடை பெறுகிறது. இம்முகாம் கீழக்கரை ஹமீதியா ஸ்கூல், மறவர் தெரு தொடக்கப் பள்ளி உட்பட பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமுக்கு செல்பவர்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்பொழுது நடந்து வரும் இந்த முகாமில் எராளமான பொது மக்கள் வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.