கீழக்கரையில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா..

கீழக்கரையில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர், ஆட்சியர் பங்கேற்று வழங்கினர்.

கீழக்கரை மஹ்தூமியா மேனிலைப் பள்ளியில் இன்று 28.01.2017 மாலை 4.30 மணியளவில் மாணவ மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை மஹ்தூமியா மேனிலைப் பள்ளி மற்றும் கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா மேனிலை பள்ளியை சேர்ந்த 236 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினர்.

இதில் கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ப.அ. சேகு அபூபக்கர், ஹைராத்துல் ஜலாலியா மேனிலை பள்ளி தாளாளர் கல்வியாளர் டாக்டர் சாதிக், பள்ளி தலைமையாசிரியர் முஹம்மது மீரா, மஹ்தூமியா மேனிலைப் பள்ளி தாளாளர் ஹமீது சுல்தான், பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி, மஹ்தூமியா தொடக்கப் பள்ளி தாளாளர் மூர் ஜெய்னுதீன், பள்ளி தலைமையாசிரியை ரிஸ்வானா, பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா முகைதீன், பள்ளியின் கல்விக் குழு செயலாளர் இப்திகார் ஹசன் மற்றும் கல்வி குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் ஹபீபு, கோடை இடி முஹீன், இராமநாதபுரம் கீழக்கரை அதிமுக முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.