கீழக்கரையில் நில வேம்பு கசாயம் வினியோகம்…

இன்று (28-01-2017) கீழக்கரையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை மக்கள் பொதுதளம், கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக கீழக்கரை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கப்பட்டது.

முகாமை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் இணைச்செயலாளர். செய்யது சாகுல் ஹமீது அவர்கள் தொடங்கி வைக்க முதல் நிலவேம்பு கசாயத்தை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கட்சித் தொகுதி இணைச்செயலாளர் ஜனாப் சித்தீக் அலி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நிலவேம்பு கசாய வினியோகம் ஆடருத்தான் தெரு, கோழியப்பா கடை சந்து,  பழைய குத்பா பள்ளி தெரு உட்பட பல பகுதிகளுக்கு இந்த வினியோகம் தொடர்ந்தது.

இந்த சீரிய நிகழ்ச்சியில் S D P I கட்சியின் நகர் நிர்வாகிகளும்,பாப்புலர் பிரண்ட் இந்தியாவின் நகர் நிர்வாகிகள், மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் நகர் நிர்வாகிகள் மற்றும் சட்ட போராளிகள் தளத்தின் ஒருங்கினைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.