திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற்றது போட்டியை உடற் கல்வி ஆய்வாளர் சின்னப்பன் தொடக்கி வைத்தார் போட்டியில் தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன போட்டிகள் பங்கேற்றனர் இப்போபோட்டியில் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் செங்கம் ஒன்றியம் பரமனந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவன் லோகேஷ் , 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் செங்கம் ஒன்றியம் மேல் பள்ளிப்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ முதலிடத்திலும்,11 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் செங்கம் ஒன்றியம் எம்ஜிஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ராதா , 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் செங்கம் ஒன்றியம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யோக பிரியா
இரண்டாம் இடத்திலும்19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் செங்கம் ஒன்றியம் மகரிஷி மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா,19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆதித்யன் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்று மாநில அளவிலான நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் அபாரமாக விளையாடிய செங்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார் நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர் இளையபெருமாள், இளையராஜா உட்பட அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.