மதுரையில் சாலையில் பைக்கில் சென்றபெண்ணிடம்   தாலி செயினை வழிப்பறி செய்த  கொள்ளையர்கள்.. சாலையில் இழுத்து சென்ற கொடூரம்..சிசிடிவி காட்சிகள்..

மதுரை மாநகர பகுதிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் பகுதியில் இன்று இரவில் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரது பின்னால் வந்த மர்ம நபர்கள் திடீரென அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி செயினை இழுத்து வழிப்பறி செய்துள்ளனர்.  அப்போது பைக்கில் இருந்து கீழே விழுந்த நிலையிலும் அப்பெண்ணை தரதரவென இழுத்தபடி செயினை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கூடல் புதூர் காவல்துறையினர் வழிப்பறிக் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் மதுரையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்று சென்ற பெண்ணிடம் ஈவு இரக்கமின்றி தரதரவென இழுத்துச் சென்று தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர் வி காளமேகம்