2 பெண் குழந்தைகளின தாய் தூக்கிட்டு தற்கொலை..

இராமநாதபுரம், நவ.5- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது 2 வது மகள் கனிமலர், 35. ஏர்வாடி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் நாகநாதன். கனிமலருக்கும், நாகநாதனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மனநலம் பாதித்த கனிமலர் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள முயன்ற கனிமலரை உறவினர்கள் காப்பாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பிய பின் கனிமலர் வெளியே நடமாட்டமில்லை. இதையடுத்து அவரது உறவினர் சுபேதா கனிமலரை தேடி வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் நைலான் கயற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் கனிமலர் கிடந்தார். இது தொடர்பாக கனிமலர் தந்தை முனியசாமி புகாரின் பேரில் ஏர்வாடி தர்ஹா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.