ராணுவ உளவுத்துறை அதிகாரி மாயமானது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு..

தமிழகத்தில் ராணுவ உளவுத்துறை அதிகாரி மாயமானது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ராணுவ உளவுப்பிரிவு அதிகாரி ஞானப்பிரகாசம் 2010ல் சென்னையில் காணாமல் போனார்.

இந்நிலையில் சென்னை போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையிலும் ஞானப்பிரகாசம் பற்றி தெரியாததால் சிபிஐக்கு மாற்றக் ராணுவ அதிகாரியின் மனைவி கோரினார்.

#Paid Promotion