முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக உறுப்பினர் சேர்க்கை..

இராமநாதபுரம் மாவட்டம்  கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர்  VKG.முத்து ராமலிங்கம் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுப்பினர் சேர்க்கை பணி நடந்தது.  இந்நிகழ்வில் இராமநாத மாவட்ட பொறுப்பாளர் புதுக்கோட்டை என்.முத்து தலைமை வகித்தார். இந்நிகழ்வின் போது  கமுதி வடக்கு ஒன்றியம், மற கமுதி பேரூர் பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் போஸ்செல்வா, இணை செயலாளர் வில்வக்கனி , ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துமீரான் , ஒன்றிய இளைஞர் பாசறை செய லாளர் சுபாஸ் சந்திரபோஸ், தகவல் தொழில் நுட்பப்பிரிவு கமுதி தெற்கு ஒன்றியச் செயலாளர், கார்த்திக் , குட்டி என்ற மோகனபாலன் உடனிருந்தனர்.