Home செய்திகள்மாநில செய்திகள் CAA வை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆலந்தூரில்   கண்டன ஆர்ப்பாட்டம்..

CAA வை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆலந்தூரில்   கண்டன ஆர்ப்பாட்டம்..

by Askar

CAA வை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆலந்தூரில்   கண்டன ஆர்ப்பாட்டம்..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக ஆலந்தூரில் மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் வகையில் அமல்படுத்த பட்ட CAA வை கண்டித்தும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது யூசுப்  தலைமையில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கி நடைபெற்றது.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக் பேசும்போது,

“CAA வை வைத்து இஸ்லாமிய  ஒரு போதும் மிரட்ட முடியாது, இந்த சட்டம் சிறுபான்மை சமூகத்தை விட மற்ற சமூகங்களுக்கு தான் மிக பெரிய அளவில் பாதிப்பு உண்டாக்கும், பாஜக ஒன்றிய அரசுக்கு விரைவில் முடிவு கட்டும் நாள் நெருங்கி விட்டது, பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி வெல்வது காலத்தின் கட்டாயம் என உரையாற்றினார்.

துணை தலைவர் முஹம்மது முனீர் பேசும்போது,

“CAA வில் மத பாகுபாடு காட்டி உத்தமன் போல பாஜக வேடம் போடுகிறது CAA சட்டம் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் வாக்களித்த அதிமுகவை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது என உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி  பேசும்போது,

“ஒன்றிய பாஜக அரசு நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயலை தான் பத்தாண்டுகளில் செய்தது ஒரு நல்லது கூட செய்யவில்லை, வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வீழ்வது உறுதியாகி விட்டது என்று உரையாற்றினார்.

மற்றும் மாநில செயலாளர்கள் சையத் அலி பல்லாவரம் ஜாகிர் உசேன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதில் காஞ்சி மாவட்டம் நிர்வாகிகள் ஆலந்தூர் நிர்வாகிகள் இந்திய மாணவர் முன்னணி நிர்வாகிகள் சமூக நீதி மாணவர் இயக்கம் நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதும் காஞ்சி மாவட்டம் சார்பாக வந்து இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் நோன்பு திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன ஆர்ப்பாட்டம் களத்தில் நோன்பாளிகள் நோன்பு திறந்து ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர்கள் முஹம்மது யூசுப் கலிமுல்லாஹ் இனாயத்துல்லாஹ் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் மே பதினேழு இயக்கம் நிர்வாகிகள் என பல்வேறு கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெண்கள் ஆண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!