Home செய்திகள் உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் மற்றும் தனியார் பள்ளிக்குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் மற்றும் தனியார் பள்ளிக்குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

by mohan

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து துறை காவல் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை காவல் துறையினர் மற்றும் தனியார் பள்ளிக்குழந்தைகள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட டிஎஸ்பி நல்லு மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி சாலையோரம் செல்லும்போது வாகனங்களை பார்த்து செல்ல வேண்டும் மற்றும் பெற்றோர்களுடன் செல்லும் போது மிக வேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் பேருந்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது படியில் பயணம் செய்யக்கூடாது ஓடும் பேருந்தில் ஏறக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இதில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் காவல்துறையினர் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்;.

உசிலை மோகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com