தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட மாஞ்சோலைதெரு அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிவாசல் தெரு அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருந்தது. ஆகையால் அந்த கட்டிடங்கள் குழந்தைகளின் நலன் கருதி இடிக்கப்பட்டது. அதில், தற்போது வரை புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை.
எனவே குழந்தைகளின் நலன்கருதி விரைவில் இரண்டு அங்கன்வாடி மையத்திற்கும் புதிய கட்டிடம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் புதிய 3வது வார்டு சன்னையன்பட்டி தெருவில் இருக்கும் கிணறு அருகில் பொது இடம் உள்ளது. அப்பகுதி மக்கள் நலன்கருதி அந்த இடத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும் சமூக நலத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.