இராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு கருத்தரங்கு..

தமிழ்நாடு போதைப் பொருட்கள் நுண்ணறிவு பிரிவு , இராமநாதபுரம் ஜாஸ் கேட்டரிங் கல்லூரி சார்பில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு இராமநாதபுரம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி தலைமை வகித்தார். ஜாஸ் கேட்டரிங் கல்லூரி நிறுவனர் முகமது சலாவுதீன் வரவேற்றார்.

போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் (எச் ஐ வி தொற்து நோய்கள், மூளை, இருதயம், நுரையீரல் , சிறுநீரகம் பாதிப்பு மற்றும் பக்கவாதம்) குறித்து மாவட்ட அரசு தலைமை மனநல மருத்துவர் பெரியார் லெனின் பேசினார். ஜாஸ் கேட்டரிங் கல்லூரி, பாத்திமா தொழிற் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.