கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ராமநாதபுரத்தில் உண்ணாவிரதம்…வீடியோ பேட்டி..

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கினர். மாவட்ட தலைவர் என்.ஆர். சக்திவேல் கூறியதாவது: கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின்சாரம் , கழிப்பறை பழுதடைந்த கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் தளவாடங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து வகையான இணையவழி சேவைகளையும் சிறப்பாக வழங்கும் பொருட்டு இணைய வசதியுடன் தரமான லேப்டாப் உட்பட அனைத்து வசதிகளையும்  வழங்க வேண்டும் தற்போதுபணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும்.

கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கூடுதல் பொறுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கவேண்டும்.

அடங்கல் செயல்படுத்த தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொடுத்து இ- அடங்கவில் உள்ள தொழில்நுட்ப மற்றும் நடைமுறை குறைபாடுகளை சரிசெய்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஒப்புதலுடன் அடங்கலை செயல்படுத்த வேண்டும்.

மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் .

28/11/2018 முதல் இணையவழி சான்றிதழை முற்றிலுமாக நிறுத்த போராட்டம் நடத்தினோம் .

5/12/2018 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்.

7/12/2018 இன்று ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் துவங்கியுள்ளோம்.

கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் 10/12/2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்க உள்ளோம்.

மாவட்ட தலைவர் என்.ஆர் சக்திவேல், மாவட்ட செயலாளர் ஆர் ஜெகராயன், மாவட்ட பொருளாளர் டி பால கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் எம். கருப்பணன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.அசோக்குமார் மாவட்ட அமைப்பு செயலாளர் எம்.கருப்பையா கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.கார்த்திக்குமார் மாவட்ட ஊடக தொடர்பாளர் கே.தட்சிணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.