Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரொனோ தொற்று உயர்வு எதிரொலி.. கீழக்கரையில் மீண்டும் விழிப்புணர்வு பணிகள் துவக்கம்…

கொரொனோ தொற்று உயர்வு எதிரொலி.. கீழக்கரையில் மீண்டும் விழிப்புணர்வு பணிகள் துவக்கம்…

by ஆசிரியர்

தமிழகத்தில் கொரோனோ தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரொனோ தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக  இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகாவிற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று (01/08/2021) காலை முதல் சுகாதார துறையுடன் இணைந்து கொரனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அரசு அலுவலர்கள். கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசீக்தீன், கீழக்கரை துணை வட்டாட்சியர் பழனிக்குமார், கீழக்கரை நகராட்சி பொறியாளர் மீரான் அலி உட்பட பலரும் கலந்து கொண்டு கீழக்கரை பஸ்ஸாடாண்ட், மீன்கடை பகுதிகள், ஏர்வாடி முக்குரோடு, திருப்புல்லாணி செக் போஸ்ட், திருப்புல்லாணி கோவில் போன்ற இடங்களில் உள்ள கடைகள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் பலரிடமும் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து அறிவுரை வழங்கியும், கொரனா விதிமுறைகளை மீறி செல்பவர்களுக்கு அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தனர்.

Photo Source:- Makkal Team : மக்கள் டீம் :

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com