செங்கத்தில் பாரம்பரிய விதைகள் பரவலாக்க திருவிழா.

பாரம்பர்ய விவசாயத்தின் சிறப்பை உணர்ந்து, இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை விவசாயம் செய்யத் துடிக்கும் பலருக்கும் வழிகாட்டவும், விதைத் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், `பாரம்பர்ய விதைகள் பரவலாக்க திருவிழா’ நடைபெற்றது ந்த விழாவில் பாரம்பர்ய காய்கறி விதைகள், சிறுதானியங்கள், கீரை விதைகள், நெல் வகைகள் என விதை வகைகள் பலவும் இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலை மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பிரேம் ஆனந்த் மற்றும் ராஜா ஒருங்கிணைப்பில் இந்தத் பரவலாக்க திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதுதொடர்பாக தர்மபுரி கூட்டமைப்பைச் சேர்ந்த இயற்கை விவசாயி பெருமாள் கூறுகையில் “விவசாயிகளின் மிகப்பெரிய சக்தி விதைகள்தான். `ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி அதைச் சார்ந்துதான் இந்தத் பரவலாக்க திருவிழா நடைபெற்றது விதைகள் பகிர்வுக்காக, விதைகள் எனச் சொல்லப்படக்கூடிய அனைத்து வகையான விதைகளும் இங்கே வந்துள்ளன. காய்கறி, கீரை, நெல், தானியங்கள் எனப் பல வகையான விதைகள் இங்கு வந்துள்ளன. விவசாயிகள் அவர்களிடம் உள்ள விதைகளை இங்கு காட்சி படுத்தியுள்ளனர். ஒரு சில விவசாயிகள், `விதைக்கு விதை தரணும்’ எனும் முறையில் இயற்கை முறையிலான விதைகளை பகிர்கின்றனர். அவர்கள் காசு வாங்குவதில்லை. ஒரு சில விவசாயிகள், விதைகளை விற்பனைக்கும் தருகிறார்கள். இப்படியாகப் பல விதங்களில் இருக்கு. சில இயற்கை விவசாயிகள், அவர்களாகவே மதிப்புக்கூட்டிய பொருள்களையும் இங்கு விற்பனை செய்கின்றனர்.மக்கள் நோய்வாய்ப்ப மீட்டெடுக்கவும், தற்சார்பு வாழ்வியலை மீண்டும் கொண்டு வரணும் என்பதற்காகவும், இயற்கையைக் காக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் பாரம்பர்ய விதைகளைக் கையிலெடுத்து இந்த விதைத் பரவலாக்க திருவிழாவை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தி வருகிறோம்” என்றார். மேளம் வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் விதை பரவலாக்க திருவிழாவை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் இயற்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் இவ்விழாவில் தர்மபுரி கலசப்பாக்கம் வேட்டவலம் ஜமுனாமரத்தூர் அவலூர்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர் பொது மக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்