
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறை சார்பில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முக கவசம் அணிவது உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் கொரோனா 3ம் அலை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக உசிலம்பட்டி பேருந்து நிலையம், தேனிரோடு, காய்கறி சந்தை, பூ சந்தை, உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், சரவணபிரபு உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களிடம் கொரோனா குறித்து துண்டு நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஆட்டோக்கள், பேருந்துகளில் பயணித்த பயணிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கொரோனா 3ம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.