
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் டாக்டர்.பஜிலா ஆசாத் தற்சமயம் துபாயில் வசித்து வருகிறார். இந்த கொரோனா பெரும் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் காலத்தில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் பயம், மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி என மனம் சம்மந்தமான அழுத்தங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையில் மன அழுத்தங்களை எப்படி கையாளுவது குறித்து பேச்சு,கட்டுரை, மனபயிற்சி என பல்வேறு பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகளை இணையதளம் மூலம் ஆலோசனை வழங்கி வருகிறார்.
இவரின் முயற்சிகளை இனம் கண்டும் பாராட்டிய லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வோர்ல்ட் ஹுயுமானிட்டேரியன் ட்ரைவ் (டபிள்யூ.எச்.டி) – World Humanitarian Drive (WHD) எனும் தொண்டு அமைப்பு இணையவழி கலந்துரையாடலை நடத்தியது. இதில் பல்வேறு நாட்டவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
இதில் கீழக்கரையை சேர்ந்த டாக்டர் பஜிலா ஆசாத் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு மனதில் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் அவற்றை கையாளுவது பற்றியும் பேசினார்.எந்த ஒருபிரச்சனைக்கு தீர்வு இருக்கிறது. பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஒருவரின் மன அழுத்தத்திற்க்கும், சோர்வுக்கும் ஆளாகி விடுவதால் பிரச்சனைகளுக்கான தீர்வு எளிதாக இருக்கும் இப்படி பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிப்போரை மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது குறித்து சிறப்பாக உரையாற்றினார். இதற்க்காக டாக்டர் பஜிலா ஆசாத்திற்கு டபிள்யூ.எச்.டி சார்பாக இன்ஸ்பைரிங் ஹுயுமானிட்டேரியன் “INSPIRING HUMANITARIAN”எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.