செங்கம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை முருகர் கோயில் பகுதியை சேர்ந்த மன்னார் வயது 60. இவர் 100 நாள் வேலை திட்டத்திற்காக மண்மலை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற மாற்றுத்திறனாளி மன்னார் மீது அதிவேகமாக வந்த பிக்கப் வேன் பின்புறமாக மோதியதில் மன்னார் தலையில் பலத்த காயமுற்று ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதற்கு காரணமான வாகனத்தை கைப்பற்றி தப்பி சென்ற வாகன ஓட்டுனர் தேடி வருகின்றனர் மேலும் இது குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காலை நேரத்தில் 100 நாள் பணிக்காக சென்ற மாற்றுத்திறனாளி மீது வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உதவிக்கரம் நீட்டுங்கள்..