Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை இளைஞர் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை விரட்டி பிடித்த கீழக்கரை காவல்துறை…

கீழக்கரை இளைஞர் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை விரட்டி பிடித்த கீழக்கரை காவல்துறை…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சங்குவெட்டி தெருவை சேர்ந்த செய்யது முகம்மது கபீர் மகன் ரிஸ்வான்  ஜூலை 4ஆம் தேதி இரவு கத்தியால் வயிற்றுப்பகுதியில் குத்தி குடல் வெளியே தள்ளிய நிலையில் மர்மமான முறையில் கொலை செய்து ரத்தவெள்ளத்தில் வீட்டு அருகில் கிடந்துள்ளார்.

இதை அதிகாலையில் கண்ட பொதுமக்கள் கீழக்கரை காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் ராமநாதபுர மாவட்ட குற்றவியல் துணை கண்காணிப்பாளர் திருமலை (கீழக்கரை பொறுப்பு) கீழக்கரை ஆய்வாளர் செந்தில்குமார் சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, கீழக்கரை சரக தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் செல்வராஜ், கீழக்கரை சரக குற்றவியல் சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள், காவலர் முனீஸ்வரன், தனிப்பிரிவு காவலர் சேகர், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். பின்பு பிரேதத்தை கைப்பற்றி கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நேற்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கூறும்போது விரைவில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன் எதிரொலியாக 24 மணி நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த செய்யது இப்ராஹிம் என்பவரை கீழக்கரை காவல் துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்

மேலும் 24 மணி நேரத்தில் கீழக்கரை காவல் துறை கொலையாளியை பிடிக்க சம்பவம் பெரும் பரபரப்புடன் பொதுமக்களால் பாராட்டப்படுவதுடன்,  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com