மதுரையில் கஞ்சா போதையில் இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை .

மதுரை மாவட்டம் வரிச்சூர் அடுத்த குன்னத்தூரில் அடையாளம் தெரியாத 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை மது போதையில் அதேபகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருப்பாயூரணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட ஒரு இளைஞனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்