Home செய்திகள் நீர் நிலைகளை தூர்வார ஒதுக்கிய நிதியை அமைச்சர்கள் வாரி கொண்டதாக பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…

நீர் நிலைகளை தூர்வார ஒதுக்கிய நிதியை அமைச்சர்கள் வாரி கொண்டதாக பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…

by ஆசிரியர்

இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு 1995 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பயிர் காப்பீடு, வறட்சி நிவாரணம் பெறுவது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் ராமேஸ்வரத்தில் நடந்தது. இதில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாலர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அவர் கூறியதாவது: நீர் நிலைகளை பாதுகாத்தல் நிலத்தடி நீர் மட்டத்ததை உயர்த்துதல் தொடர்பாக தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு ரூ.336 கோடி கடந்தாண்டு ஒதுக்கியதாக தெரிவித்துள்ளது. இந்தாண்டு ரூ.400 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தூர் வருவதாக கூறி நிதியை ஆளுங்கட்சி அமைச்சர்கள் வாரி கொள்கின்றனரே தவிர குளங்கள், எரிகள் தமிழகத்தில் இதுவரை எங்கும் தூர் வாரப் படவில்லை. இதனால் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதுவரை பல முறை டில்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பிரசனைகள் குறித்து பிரதமரிடமோ, மத்திய அமைச்சர்களிடமோ பேசி தீர்வு கண்டதாக இதுவரை தெரியவில்லை. முதல்வரின் டெல்லி பயணம் அனைத்தும் இரு கட்சிகளின் (அதிமுக, பாஜக) உறவு குறித்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டியும், ஆட்சியை பாதுகாத்து கொள்ளவும் மட்டுமே டில்லி செல்கிறார். தமிழக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!