வழிப்பறி மற்றும் காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

மதுரை, முனிச்சாலை, இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவருடைய மகன் பி.டி.ஆர்.வினோத் என்ற பழனிவேல்ராஜன் 28/2019 என்பவரும் மற்றும் மதுரை, முனிச்சாலை, இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த உதயசூரியன் என்பவருடைய மகன் கருவாயன் என்ற செல்வபாண்டி, 32/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் வழிப்பறி மற்றும் பணியிலிருந்த காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்கு உட்பட கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, உத்தரவுப்படி இன்று (02.03.2019) இருவரும் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்