Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல். 2 பேர் கைது…

வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல். 2 பேர் கைது…

by ஆசிரியர்

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல். 2 பேர் கைது, வனத்துறை நடவடிக்கை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட சேத்தூர் பிரிவு  பிராவடியாறு பீட் வனப் பகுதியில் இன்று அதிகாலை வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் வனவர் குருசாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பட்டா இடத்தில் இரண்டு பேர் சந்தேகத்துக்கு இடமாக படுத்திருப்பதைக் கண்ட வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது இருவரும் முன்னுக்குப் பின் புறமாக பேசியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வன விலங்குகளான மான், காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடுவதற்காக மாம்பழம், கொய்யா பழம் உள்ளிட்ட பழங்களுக்கு இடையே மறைத்து வைத்து நாட்டு வெடிகுண்டுகளை பத்துக்கு மேற்பட்ட இடத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இவர்கள் சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குருவேந்திரன் மகன் மனோஜ் குமார் வயது 20 , சுந்தரராஜபுரம் சமுத்திரம் மகன் சதீஷ்கர் வயது 21. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருவதாகவும் தற்போது கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இருவரும் சேர்ந்து வனவிலங்குகள் வேட்டை ஆடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயார் செய்து பதுக்கி வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் காட்டிய இடங்களில் சோதனை செய்து 10 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? இவர்கள் ஏற்கனவே வனவிலங்குகளை வேட்டையாடி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!