சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் உட்பட நான்கு நபர்கள் கைது..

மதுரை மாநகர திருநகரை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தாயார் மகாலட்சுமி கடந்த 17.02.2019 ம் தேதி திருநகரை சேர்ந்த முருகன் மகன் சதீஸ்குமார் 27/19 என்பவருக்கு சிறுமி தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டாம் என பலமுறை சொல்லியும் கேட்காமல் கட்டாய திருமணம் செய்துவைத்ததாகவும், சிறுமியின் தாயார் அடிக்கடி பிரச்னை செய்துவந்ததால் நேற்று (29.03.19) சிறுமி, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் 17 வயது சிறுமி என்று தெரிந்தும் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்த தன்னுடைய தாய் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர்கள் மீதும், தான் சிறுமி என்று தெரிந்தும் தன்னை பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாக்கிய சதீஸ்குமார் மற்றும் சதீஸ்குமாரின் தாய் மற்றும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார்.

அப்புகாரை பெற்று குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சதீஸ்குமார், சிறுமியின் தாயார் மகாலட்சுமி, சிறுமியின் பாட்டி மீனா, சிறுமியின் தாத்தா கண்ணன் ஆகிய நபர்களையும் காவல் ஆய்வாளர் திருமதி.கீதாரமணி அவர்கள் கைது செய்தார். சதீஸ்குமாரின் தாய் மற்றும் தந்தையை விரைவில் கைதுசெய்ய மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவிட்டுள்ளார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்