Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பெண் உட்பட மூன்று நபர்கள் கைது..

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பெண் உட்பட மூன்று நபர்கள் கைது..

by ஆசிரியர்

மதுரை மாநகர் C3 எஸ்.எஸ்.காலனி ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சரவணனுக்கு கிடைத்த தகவலை பெற்று ரோந்து காவலர்களுடன் மதுரை டவுன், கென்னட் ரோடு மீனாட்சி கார் பார்கிங் அருகில் சோதனை செய்தபோது கம்ப்யூட்டரில் கலரில் டைப் செய்த நம்பர்கள் அடங்கிய பேப்பரை வைத்திருந்த மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகரைச் சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் மகாலிங்கம் 57/19 என்பவரை பிடித்து விசாரணை செய்த போது தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது.

மேலும் இந்த லாட்டரி சீட்டுகளை மதுரை அண்ணாநகரை சேர்ந்த காந்தி மகன் கிருஷ்ணகுமார் என்பவர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி திருமதி. ராதிகா என்பவர் லேப்டாப் மூலம் நம்பர்களை பிரிண்ட் செய்து வாங்கி கிருஷ்ணகுமார் என்பவர் வாகனம் மூலமாக மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமலும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளுக்கு நிறைய பரிசுகள் கிடைப்பதாக ஆசைவார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றியதையும் ஒத்துக் கொண்டார்.

மேலும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்வதாகவும் ஒப்புக்கொண்டதால் மேற்படி மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து DELL Laptop-1, HP Laptop (small)-1, EPSON Printer – 2, KENON XEROX Machine -1, UPS, Stabilizer, KEY Board-10, LG CPU, TVS Printer, Lava Button Cell-2, Samsung Button Cell-2, மாநில லாட்டரி என்ற பெயரில் விற்பனை செய்ய பயன்படுத்திய சீல்கள் 24, லாட்டரி விற்பனை செய்தவர்களின் பெயர் மற்றும் அதற்கான ரசீது, லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ய பயன்படுத்திய பில் புக் மற்றும் போலி லாட்டரி விற்பனை செய்த பணம் ரூபாய்.51,500/-ம் கைப்பற்றப்பட்டு மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!