ஊடகத்துறைக்கு என்று ஓரு தர்மம், நியாயம், நடுநிலைமை பேணுதல் என்ற கடமை உண்டு. ஆனால் இதையெல்லாம் பேணாமல் பாசிச சக்தியை இந்திய நாட்டில் வளர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று நாயை ஓநாயாக மாற்றும் வேலையை பார்க்க கூடியவர்தான் பிரபல REPUBLIC TVயில் வேலை பார்க்கும் அர்னாப் கோஸ்வாமி எனும் நபர். இவருடைய பணியே இல்லாத பிரச்சினையை ஊதி பெரிதாக்கி மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தையும், பீதியையும் உண்டாக்குவதுதான்.
சமீபத்தில் இவர் கையில் எடுத்த ஆயுதம். சமீபத்தில் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலை வைத்து சிறுபான்மையனரின் சமூக அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக மக்கள் மத்தியில் சித்தரிப்பது. உதாரணமாக சில தினங்களுக்கு முன்னர் Jamet-e-Islami Kashmir அமைப்பை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி சிறுபான்மையினருக்காக அறவழியில் போராடி வரும் Jamat-e-Islamic Hind அமைப்பையும், அதன் தலைவரையும் தீவிரவாத இயக்கம் என வழக்கம் போல் கதற தொடங்கினார். ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் எதிர்ப்பு குரலையும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலையும் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமியின் REPUBLIC TV நிர்வாகம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது போன்ற ஊடக மனிதர்களின் செயல்பாடுகளே பொதுமக்களுக்கு ஊடகத்துறை மீதுள்ள மரியாதையும், நம்பகத்தன்மையும் குறைந்து, ஓரு வகையான வெறுப்புணர்வு உருவாக காரணமாக அமைந்து விடுகிறது. இது போன்ற சமுதாய கேடுகளை மக்கள் அடையாளம் கொண்டு சமுதாயத்தை விட்டு ஓதுக்கி வைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
You must be logged in to post a comment.