இராமநாதபுரத்தில் ரூ.34 கோடி மதிப்பில் போலீஸ் தொகுப்பு வீடுகள் கட்டுமான வேலை ஆரம்பம்..

இராமநாதபுரம் மாவட்ட காவல்த துறை 12வது பட்டாலியன் காவலர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட 79 ஏக்கர் இடத்தில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமை வகித்தார். தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வாரிய முதன்மை பொறியாளர் தென்னரசு, தெற்கு மண்டல கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், மதுரை மண்டல செயற் பொறியாளர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ஞானவேல், 12வது பட்டாலியன் கமாண்டன்ட் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 3 பிளாக் காவலர் குடியிருப்பு, அலுவலகம் மற்றும் ஆயுதங்கள் வைக்கும் அறைகள் கட்டப்பட உள்ளது.