அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழாவில் குளறுபடி ..

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் வரவேற்பு சாம்ராஜ் ஒன்றிய கழக செயலாளர், தலைமை டிகே ராஜேந்திரன் மாவட்ட கழக செயலாளர் , பழனியப்பன் கழக தலைமை நிலைய செயலாளர், சேகர் தலைமை கழக பேச்சாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடைசியாக முன்னாள் அமைச்சர்  பழனியப்பன் பேசிய பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் மக்களுக்கு இலவசமாக கட்சி துண்டு சேலைகள் பழனியப்பன் வழங்கினார் இதில் இலவச சேலைக்கு   மேடையில் ஏரி மக்கள் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டது. இதனால் பழனியப்பன் சிலைகளை அப்படியே மேடையில் விட்டுவிட்டு கீழே இறங்கி கிளம்பிவிட்டார் இதில் கட்சி மக்கள் மேடையில் ஒருத்தருக்கு ஒருவருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிறகு பாப்பாரப்பட்டி போலீசார் வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி