Home செய்திகள் மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்…

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்…

by ஆசிரியர்

தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. அதில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ் கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்புகள், மே 17 இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி ஏந்தியும் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் எதிர்ப்பை தெரிவித்தன. வைகோ தலைமையில் கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்தார். பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே பி நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- கனகராஜ், மதுரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!