ஹாக்கி விளையாட்டில் சாதனை இராமநாதபுரம் வீரர்களுக்கு பாராட்டு..

நடப்பு கல்வி ஆண்டில் நடந்த ஹாக்கி போட்டிகளில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ராமநாதபுரம் ஹாக்கி வீரர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கும் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நடப்பு கல்வி ஆண்டில் நடந்த தேசிய, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் 7 கோப்பைகள், தங்கம், வெள்ளி, பதக்கங்களை ராம நாதபுரம் ஹாக்கி வீரர்கள் குவித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். இவர்களை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் செல்லத்துரை அப்துல்லா, இராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி ஆகியோர் பாராட்டினார்.

மேலும் ராமநாதபுரத்தில் சர்வதேச தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தை அமைத்து கொடுத்த மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், வீரர்களை பயிற்றுவித்த ஹாக்கி பயிற்றுநர் தினேஷ் குமார், ஹாக்கி வீரர்கள் அதிசய ராஜா பி.சதீஷ், ப்பி.முரளிகிருஷ்ணன், ஆர்.பாலாஜி, ஜி.அர்ஜுன், ஆர்.ஹரிஹரன், ஏ. கிரி பிரசாத், எம். ஆனந்த், எஸ்.மணிபாரதி, என். ஷாகுல் அசாருதீன், எஸ். அன்பரசன், வி.அருண்குமார், ட்டி.அபிஷேக், ஆர்.மனோஜ் குமார், எம்.அஜிஸ் ரஹ்மான், கே. சந்தோஷ் கே.சபரிநாதன், வி.முத்து அபிஷேக் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பகீரத நாச்சியப்பன், ரமேஷ் பாபு, ரமேஷ், தாமரை செல்வன், பயிற்றுநர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..