அல் பைய்யினா பள்ளியின் “CHARITY DAY”

கீழக்கரை அல் பைய்யினா பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு அப்பாற்பட்டு பல தனித்திறமையை வளர்ப்பதற்கான பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் கடந்த 15-02-2018 அன்று குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியம் மற்றும் தான தருமத்தின் அவசியத்தை இளம் வயதிலேயே அறிந்து கொள்ளும் வகையில் CHARITY DAY கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் 120கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது சேமிப்புகளாக இந்திய ரூபாய் 50,000/-கு மேல் சேமித்து வைத்தருந்தனர். பின்னர் அச்சேமிப்பு தொகை மூலம் பள்ளிகளின் குழந்தைகள் மூலம் ஏர்வாடி பகுதியில் அமைந்துள்ள “தாருல் ஹுல்க் மதரஸா” குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்தனர். அதே போல் அப்பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு தண்ணீர் தொட்டி வசதி, மோட்டர் வசதி போன்ற தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட்டது.

அதே போல் மதரஸாவில் அல் பைய்யினா பள்ளியின் “தாவா கிளப்” மாணவ, மாணவிகள் மதரஸாவில் உள்ள கீழ்நிலை மாணவர்களுக்கு அழைப்பு பணிகள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதே போல் இன்னும் சில பள்ளிகளுக்கு கழிப்பறை பாராமரிப்பு பணிகளுக்கான உதவி, உணவு உதவி மற்றும் உடைகளும் வழங்கப்பட்டது.

அல் பைய்யினா பள்ளியின் பணிகள் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

———————-////////————————-/////-