
மண்டபம் வட்டாரம் உச்சிப்புளி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை (பிப்ரவரி 19 முதல் 24 ந்தேதி) வைட்டமின் “ஏ” விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சி முகாமில் விட்டமின் ஏ திரவ கருத்தரங்கு நடைபெற்றது. இதில் துணை இயக்குனர் டாக்டர். குமரகுருபரன் வழிகாட்டுதல் படி மாவட்டம் முழுவதும், இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் உள்ள பிறந்து 6 மாதக்குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரை வைட்டமின் ஏ திரவம் சிறப்பு முகாமாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிமுகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். வைட்டமின் “ஏ” திரவம் குழந்தைகளுக்கு வழங்குவதால் மாலைக்கண் நோய் மற்றும் கண்குறைபாடுகள் அறவே இருக்காது என துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் அறிவுறுத்தினார் .
இப்பயிற்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிளாரட், டாக்டர் . பாலசுப்ரமணியன் மற்றும் மண்டபம் வட்டார துணை மருத்துவர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இது போல தேவிபட்டிணம் வட்டார மருத்துவ ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அந்நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். மகேஸ்வரி மற்றும் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
You must be logged in to post a comment.