இராமநாதபுரத்தில் அஇஅதிமுக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உண்ணாவிரதம் ..

இராமநாதபுரம் அரண்மனை முன்பு அஇஅதிமுக சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம் போரட்டம் நடைபெற்றன.

இந்த போராட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ராஜ கண்ணப்பன் தலைமை வகித்தார், தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர்.

மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில மகளிரணி துணை செயலாளர் கீர்த்திகா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட அவை தலைவர் முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணி முத்து, இளம் பெண் இளைஞர் இளம் பாசறை தொகுதி கழக இணை செயலாளர் தஞ்சி, சுரேஷ், அசோக்குமார், ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சாமி நாதன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.