Home செய்திகள் பாவூர்சத்திரம் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம்..

பாவூர்சத்திரம் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் அஞ்சல் துறையுடன் இணைந்து ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் முகாமிற்கு தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் மற்றும் நிர்வாகி அருணாச்சலம், ரஜினி, ஆனந்த், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் அஞ்சல் துறை அதிகாரி ஜோதி வரவேற்றார். கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வட்டாரத் தலைவரும் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும் ஆகிய இளங்கோ, அஞ்சலக ஆய்வாளர் ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் டாக்டர் சினேகா பாரதி நன்றியுரை ஆற்றினார். நேற்று துவங்கிய இந்த சிறப்பு முகாம் வரும் 30. 08. 2023 வரை ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து ஆறு நாட்கள் அஞ்சல் துறை ‌‌ மற்றும் லைன்ஸ் கிளப் சார்பாக பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற உள்ளது.

முகாமில் குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், ஐந்து வயது முடிந்த குழந்தைகளுக்கு ஆதார் புதுப்பித்தல், 15 வயது முடிந்த குழந்தைகளுக்கு ஆதார் புதுப்பித்தல், ஆதார் எடுத்து 10 வருடம் முடிந்தவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் முதலிய ஆதார் சேவைகள் அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்குகள் துவங்க வேண்டி இருந்தால் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று முகாமில் சேமிப்பு கணக்கு துவங்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. எனவே பாவூர்சத்திரம் சுற்று வட்டார மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com