திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் வாகன விபத்து ஒருவர் பலி…

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் வீர சிக்கம்பட்டி பிரிவு அருகே வத்தலக்குண்டில் இருந்து வந்து கொண்டிருந்த மகேந்திரா வேன் இரண்டு சக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்த சித்தையன்கோட்டையை சேர்ந்த ரசூல்மைதின்(26) த/பெ.காதர் என்பவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் திண்டுக்கல் அசனாத்புரத்தில் குடியிருந்து கொண்டு வத்தலக்குண்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது, இவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல்துறையினர் இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்