பென்சில் முனையில் அழகிய பெயர்களை தொடர்ச்சியாக 16 மணி நேரத்தில் செதுக்கி உலக சாதனை… புதுச்சேரி முதல்வர் வாழ்த்து…

புதுச்சேரி வக்ஃபு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாய நல கூடத்தில் புதுச்சேரி ராஜிவ்காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவி செல்வி.B ரோபினா பேகம் பென்சில் முனையில் ஏக இறைவனின் 99 அழகிய பெயர்களை தொடர்ச்சியாக 16மணி நேரத்தில் செதுக்கி உலக சாதனை படைத்தார்.

வெற்றிகரமாக சாதனை படைத்த மாணவி ரோபினா பேகம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்