Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் திருமங்கலம் பணிமனை அரசு பேரூந்துகள்… நிர்வாகம் நித்திரையில் இருந்து விழிக்குமா??

தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் திருமங்கலம் பணிமனை அரசு பேரூந்துகள்… நிர்வாகம் நித்திரையில் இருந்து விழிக்குமா??

by ஆசிரியர்

மதுரை மாநகர் வட்டத்தில் மிகவும் அதிகமான வழித்தடங்களை கொண்ட பணிபனைகளில் ஒன்றாகும்.  ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் சமீபகாலத்தில் 15கும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் மத்தியில் அரசு பேரூந்தில் பயணம் செய்வதில் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 29/03/2021 அன்று TN58N1888 ஏற்பட்ட விபத்தில் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.  அதே போல் இன்று (03/04/2021) இன்று மதியம் திருமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த திருமங்கலம் பணிமனைக்கு TN58N1541 சொந்தமான பேருந்து ஆண்டாள்புரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிளம்பி பொழுது பிரேக் பிடிக்காமல், பாலத்தில் பக்கவாட்டில் மோதி நின்றது, ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது சம்பந்தமாக திருமங்கலம் பணிபனை ஊழியர்கள் கூறுகையில், “நாங்கள் பலமுறை உயர் அதிகாரிகளிடம் எடுத்து கூறியும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை” என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

திருமங்கலம் பணிமனை பேரூந்துகள் இன்னும் பல உயிர்களை பலி வாங்கும் முன்பு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:-  வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!