Home செய்திகள் மதுரையில் அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி பெண் போக்குவரத்துக் காவலர் உட்பட 4 பேர் பலி..பலர் படுகாயம்..

மதுரையில் அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி பெண் போக்குவரத்துக் காவலர் உட்பட 4 பேர் பலி..பலர் படுகாயம்..

by ஆசிரியர்

மதுரையில் அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி பெண் போக்குவரத்துக் காவலர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலி, மற்றொருவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். காயங்களுடன் பெண் உட்பட பலர் மருத்துவமனையில்அனுமதி.

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அருகே டிபிகே பாலத்தில் அதிவேமாக திருமங்கலத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து வந்துள்ளது, அப்போது சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காத்திருந்த தல்லாகுளம் போக்குவரத்துக் காவலர் ஜோதி மற்றும் அவருடைய உறவினர் சத்தியவாணி இருவர் மீது பேருந்து மோதியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானர், அதேபோல் சாலையின் மறுபக்கம் சாலையை கடப்பதற்காக காத்திருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மீது மோதியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்,

மேலும்,படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தனின் நண்பன் விக்கி மற்றும் சத்தியவாணியின் 15 வயது மகள் இருவரையும் மீட்டு காவல் துறையினர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர், இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

மதுரையில் நள்ளிரவில் சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசுப் பேருந்தால் இருவேறு இரு சக்கர வாகனங்களில் வந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியான சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் ஓட்டுனரை தர்மராஜ் புதுக்கோட்டையை சேர்ந்த கைது செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் இரவு நேரங்களில் ரிங் ரோடு வழியாக செல்லக்கூடிய அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நகருக்குள் வருவதால் அதிவேகமாக செல்வதாலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் சுற்று சாலை வழியாகவே வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!