மதுரை அருகே,பரவை பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாமின் 569 மனுக்கள் பெறப்பட்டது.மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா தலைமை தாங்கினார்.மாவட்ட துணைச் செயலாளர் மூவேந்திரன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆர்.கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயலட்சுமி வரவேற்றார்.இந்த முகாமை, மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தொடக்கி வைத்தார். இந்த முகாமில், கவுன்சிலர்க ள் செளந்தரபாண்டியன், கீதா செந்தில், ராமேஷ்பாண்டி, வின்சி, செவத்தியம்மாள்,பகவதி ஆறுமுகம், நாகேஸ்வரி கிருஷ்ண திலகர், திருநாவுகரசி திருப்பதி, லதா பால சுப்பிரமணி, மீனாட்சி ஜெயராமன், அன்புசெல்வன், சரவணன் உள்படஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கை தொடர்பான 569மனுக்களை கொடுத்தனர். முகாமினை, பேரூராட்சி உதவி இயக்குனர் சு. சேதுராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முடிவில் பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன் நன்றி கூறினார்.
வி காளமேகம்
You must be logged in to post a comment.